புதுச்சேரி அரசுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு

x

புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் எண்ணிக்கையை குறைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் இரு செமஸ்டர்கள் மட்டும் தமிழ் மொழி பாடம் நடத்தப்படுவது மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதிப்பதாகவும், அதனால், 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு பழைய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும் படி புதுச்சேரி அரசு மற்றும் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்