மும்பை ஏர்போர்ட் அவலநிலை... US-லிருந்து திரும்பிய முதியவர்... சுருண்டு விழுந்து பரிதாப பலி

x

சக்கர நாற்காலி இல்லாததால் மும்பை விமான நிலையத்தில் ஒன்றரை கிலோமீட்டர் வரை நடந்து சென்ற முதியவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் தனது மனைவியுடன் வந்த 80 வயது முதியவர் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்... சக்கர நாற்காலி பற்றாக்குறையால் விமானத்தில் இருந்து இமிகிரேஷன் கவுண்டர் வரை ஒன்ரரை கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டி இருந்த நிலையில், ஒரு சக்கர நாற்காலி மட்டுமே இருந்ததால் அதில் மனைவியை அமர வைத்து விட்டு முதியவர் நடந்து வந்துள்ளார்... அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்... இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்