Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2024) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-01-2024) | Morning Headlines | Thanthi TV
x
  • சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்பு....... 5 கோடியே 50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்....
  • எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தென்மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு... வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தமிழக அரசுடன் சேர்ந்து இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்த திட்டம்...
  • VinFast நிறுவனத்தின் முதலீடு தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்... 2024-இல் இன்னும் பல வியத்தகு சாதனை அறிவிப்புகளை தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் பதிவு...
  • தமிழ்நாட்டில் 31 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனங்கள்... பசுமைப் பொருளாதாரம், தரவு மையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு இருக்கும் என சிங்கப்பூர் தூதரகம் தகவல்
  • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்ப்பை விட முதலீடு அதிகமாக இருக்கும் என கணிப்பு.. முதலீட்டு விவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் 8ம் தேதி அறிவிப்பார் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்
  • பிரெஞ்சு நிறுவனமான வாலியோ தமிழகத்தில் 1,000 கோடி முதலீடு செய்ய திட்டம்.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு...
  • பரபரப்பான அரசியல் சூழலில் வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல்.. 4வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என கணிப்பு..

Next Story

மேலும் செய்திகள்