கடந்த ஆண்டை பின்னுக்கு தள்ளிய சொத்து வரி வசூல்

x

சென்னை மாநகராட்சியில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தும் நடைமுறை உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சொத்து வரி 1800 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த நிதியாண்டை விட 227 கோடி ரூபாய் அதிகம் வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக, 1700 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், மேலும் 100 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வருகிற 30ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் அல்லது 5 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்ட நேர்ந்தால் ஒரு சதவீதம் தனி வட்டியுடன் செலுத்த நேரிடும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்