பைக்கில் அதிவேகமாக வந்து காரில் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக்கை ஓட்டிய போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... பங்காருபேட்டையைச் சேர்ந்த நாகராஜப்பா, தனது பைக்கில் கோலார் - பங்காருபேட்டை சாலையில் உள்ள பூதிகோட்டை மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். மேம்பாலத்தில் இருந்த வளைவில் அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நாகராஜப்பா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து பதிவான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளைப் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்