"சிஏஏவை எதிர்க்கும் காங்கிரஸ்.." பதிலடி கொடுத்த அமித்ஷா | CAA

x

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக வெற்றிபெற செய்வதில் மக்கள் உறுதியாக இருப்பதாக கூறினார். கட்சி மாறுதல் மற்றும் குதிரை பேரம் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் ஒரே தலைமையின் கீழ் ஆட்சி நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த 10 ஆண்டுகளில் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்துள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார். மேலும், ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் 70 ஆண்டுகள் தாமதப்படுத்தியதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார்..


Next Story

மேலும் செய்திகள்