ரசிகர்களுக்கு கொடுத்த பிறந்தநாள் தரிசனம்..கெத்தாக என்ட்ரி கொடுத்த `பாலிவுட் பாட்ஷா'

x

நடிகர் ஷாருக்கான் தனது 58வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் சமீபத்தில் பதான், ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நிலையில், அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த சூழலில் ஷாருக்கான் இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை மன்னத் பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த ஷாருக்கன் ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்..


Next Story

மேலும் செய்திகள்