திருப்பதியில் 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி வருமானம்..."புதிதாக கட்டப்பட்டுள்ள 273 கோவில்கள்"

x

நலிவடைந்த கோவில்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம், கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீவாணி டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நன்கொடையை

பயன்படுத்தி, தேவஸ்தான நிர்வாகம், பாழடைந்து போன 176 கோவில்களை புணர் நிர்மாணம் செய்து குடமுழுக்கு நடத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மீனவர்கள் ஆகியோர் வசிக்கும் பகுதிகளில் இதுவரை 273 கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதாகவும், வருமானம் இல்லாத 501 கோவில்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் நிதி உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்