இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (17-01-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்கள்...

பேருந்து, ரயில் நிலையங்களில் நிரம்பி வழியும் பயணிகள் கூட்டம்...

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,700க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

18 காளைகளை அடக்கி முதலிடம்

விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி...

18காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீர‌ர்

கருப்பாயூரணி கார்த்திக்கு கார் பரிசு...

17 காளைகளை பிடித்து அபிசித்தர் 2ஆம் இடம்..

"ஜன.24 - கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு"

வரும் 24ஆம் தேதி மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு...

தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்... எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் எனவும் சூளுரை..

சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா, பெசன்ட் நகர்

மற்றும் மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த மக்கள்...

தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களிலும்

கூட்டம் அலைமோதியது..

மஞ்சுவிரட்டு - 2 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில், காளை முட்டி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழப்பு...

போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது சோகம்....

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்

எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்...

அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சிக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

மக்கள் நலனுக்காக அயராது உழைத்து, தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் எம்ஜிஆர் என பிரதமர் மோடி புகழாரம்...

ரூ.4,000 கோடி திட்டங்கள் தொடக்கம்

கேரளாவில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினார்...

தேர்தல் அறிக்கை-கருத்து கேட்பு

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது காங்கிரஸ் கட்சி...

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தகவல்..

பிரக்ஞானந்தா முதலிடம்

நெதர்லாந்த் செஸ் தொடரில் உலக சாம்பியனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா...

இந்திய செஸ் தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி முதல்முறையாக முதலிடம்..


Next Story

மேலும் செய்திகள்