இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (12-12-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழக அரசுக்கு பாராட்டு

சென்னையில் புயல் வெள்ள பாதிப்பு குறித்து, 2 பிரிவுகளாக மத்திய குழுவினர் இன்று ஆய்வு...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டதால் உயிர் சேதம் குறைந்துள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி பாராட்டு...

தேசிய பசுமை தீர்ப்பாயம் சரமாரி கேள்வி

எண்ணூரில் எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவு...

11 கிலோ மீட்டர் தொலைவுக்கு எண்ணெய் பரவும் வரை என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என CPCL-க்கு சரமாரி கேள்வி...

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் குறித்து தமிழக அரசிடமும் விளக்கம் கேட்பு...

சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்

புயல் வெள்ளத்தால் ஆதார், ரேஷன் மற்றும் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்...

சென்னையில் 46 இடங்களில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பம்...

வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்...

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை

மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளில், பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை...

3 ஆயிரத்து 449 பேருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழை இன்று வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்...

ஈ.பி.எஸ்-க்கு விலக்கு

கொடநாடு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு...

சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு...

3 நாட்கள் காவல்

லஞ்சம் பெற்ற புகாரில் கைதான, அமலாக்கத் துறை அதிகாரி அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி...

வரும் 14ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவு...

ராஜஸ்தானில் புதிய முதல்வர் தேர்வு

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு...

ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இன்று முடிவு...

நாளை நடைபெறும் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல்...


Next Story

மேலும் செய்திகள்