இன்றைய தலைப்பு செய்திகள் (18-02-2024) | 9 PM Headlines | Thanthi Tv Today Headlines

x

"மீனவர்களை மீட்க நடவடிக்கை"

இலங்கையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வலியுறுத்தல்...

நாளை பட்ஜெட்-லோகோ வெளியீடு

2024- 2025ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு...

"தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி..." என்ற வாசகத்துடன் லோகோ இன்று வெளியீடு...

"பாஜகவால் மட்டுமே முடியும்"

இந்தியாவை வளர்ச்சியடைய செய்ய பாஜகவால் மட்டுமே முடியும்...

டெல்லியில் நடந்த பாஜக தேசிய பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேச்சு...

குடும்பத்திற்காக ஆட்சியைப் பிடிக்க நினைப்பதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் மீது அமித்ஷா கடும் தாக்கு...

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு...

காங். - ம.நீ.ம. கூட்டணி?

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் இருந்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு என தகவல்...

வரும் 21ம் தேதி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார் கமலஹாசன்...

"தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை"

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை...

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் திட்டவட்டம்...

சசிகலா, டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் விருப்பம்..

நாளை ஆலோசனை

சென்னையில் நாளை நடைபெறுகிறது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம்...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் குறித்து முக்கிய ஆலோசனை

யானை தாக்கி பெண்கள் பலி

ஒசூர் அருகே, ஒரேநாளில் 2 பெண்களை தாக்கிக் கொன்ற ஒற்றை காட்டு யானை...

யானை தாக்கி மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த‌தால் பதற்றமான சூழல்...

பொதுமக்கள் சாலை மறியல்...

யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்...

இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி...

434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை..


Next Story

மேலும் செய்திகள்