இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-09-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்....

ஆளுநர் ஒப்புதல் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு....

----

திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் நச்சு சக்திகளுக்கு, மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்.....

அரசியல் அறம் அற்றவர்களுடன் தொடர்ந்து போராடும் அவலம் நிலவுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை...

------

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெடிகுண்டு கலாசாரம் தலைவிரித்தாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...

மக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்குமாறு

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தல்...

-------

.ஆ.ராசா விவகாரத்தில் கைது சம்பவத்தை கண்டித்து கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம்....

பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு பதாகைகளை ஏந்தி முழக்கம்....

-----

கலவரம் செய்தவர்களை பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவார்த்தை கூட பேசாதது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி...

புதிய பிரச்சினைகளை உருவாக்கி ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளை மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு...

-------

பாஜக வெறுப்பு அரசியலை பரப்புவதாக, திருமாவளவன் குற்றச்சாட்டு...

ஆ.ராசாவின் பேச்சை பாஜக தேவையின்றி பெரிதாக்குகிறது என முத்தரசன் கருத்து....


Next Story

மேலும் செய்திகள்