நோயாளியுடன் விரைந்த ஆம்புலன்ஸ்... கார் ரூபத்தில் அதிவேகமாக உருண்டு வந்த மரணம் - பகீர் காட்சி

x

அமெரிக்காவில், சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றுகொண்டிருந்த போது, குறுக்கே, கார் ஒன்று உருண்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாசாசூசெட்ஸ் அருகே உள்ள பீபாடி பகுதியில் இருந்து, பாஸ்டனில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று கொண்டிருந்தனர். சாலையில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென குறுக்கே, கார் ஒன்று உருண்டு வந்தது. ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை திருப்பியதால், ஆம்புலன்ஸ் மீது மோதாமல், தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்