காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்......

21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு.......

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக தேர்தல்.....காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு...தமிழகத்தில் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைப்பு.....

அருணாச்சல பிரதேசத்தில் சட்டமன்றத்திற்கும், மக்களவைக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல்...60 சட்டமன்ற தொகுதிகளில் 133 வேட்பாளர்களிடையே கடும் போட்டி.....

நக்சல் அச்சுறுத்தல் உள்ள மகாராஷ்டிராவின் வனப்பகுதியான கட்சிரோலி, சத்தீஸ்கரின் நாராயண்பூர், சிக்கிம் மாநிலத்தில் இன்று மக்களவை தேர்தல்.....வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்......

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளுக்கு, தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு......மலைக் கிராம வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்களை தலையில் சுமந்து சென்ற அதிகாரிகள்....


Next Story

மேலும் செய்திகள்