காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஊழல், சுரண்டலுக்கு மற்றொரு பெயர் போன கட்சி திமுக என்று பிரதமர் மோடி சாடல்......வெறுப்பு அரசியலை வளர்ப்பதை தவிர, ​​திமுகவும், இந்தியா கூட்டணியும் எதுவும் செய்யவில்லை என குற்றச்சாட்டு....

சாதி, மதத்தால் மக்களை பிளவுப்படுத்தும் பாஜக, திமுகவை குற்றம்சாட்டலாமா?...இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி..

சென்னை தியாகராய நகரில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் விதிமீறல் புகார்...தேர்தல் விதிமுறைகளை மீறி சாலையில் விளம்பர பதாகைகள் வைத்ததாக மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வழக்கு...

சென்னையில் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோ, ஃபிளாப் ஷோ ஆகிவிட்டது....திராவிடக் கோட்டத்தில் ஷோ காட்டினால் எடுபடுமா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கிண்டல்....

விமானத்தில் வந்து இறங்கி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் வாக்களித்து விடுவார்களா?.......தமிழகத்தில் எந்தக் காலத்திலும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.....


Next Story

மேலும் செய்திகள்