இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x

543 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது...

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் அறிவிப்பு...


மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகிறது...

அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது அன்று தெரியும்...


விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது...

விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ வாக இருந்த விஜயதாரணி ராஜினாமா செய்த நிலையில் தேர்தல் அறிவிப்பு...


நாடு முழுவதும் 2 ஆயிரத்து 100 தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்..

குழந்தைகளை வைத்தும், ஜாதி, மதத்தை குறிப்பிட்டும் பிரசாரம் செய்யக்கூடாது என வலியுறுத்தல்...


வரும் மக்களவை தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேர் வாக்களிக்கின்றனர்...

47.1 கோடி பெண் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்