இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-04-2024)

x

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 69.46 சதவீதம் வாக்குப்பதிவு...

மக்களவை தேர்தலில் பதிவான இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்...


தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீதம் வாக்குப்பதிவு...

குறைந்தபட்சமாக

மத்திய சென்னையில் 53.91 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு...


69.46 சதவீத வாக்குப் பதிவில் இருந்து இறுதி வாக்குப் பதிவு என்பது சிறிய அளவில் மாறுபட்டு இருக்கலாம்...

தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தந்தி டிவிக்கு விளக்கம்...


தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது...

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்...


சென்னை கண்ணகி நகரில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய கஞ்சா வியாபாரி...

காயமடைந்த இரண்டு காவலர்கள் மருத்துவமனையில் அனுமதி...


ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை...

வாழை மரங்கள் சேதம்... விவசாயிகள் வேதனை...


Next Story

மேலும் செய்திகள்