இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x
  • குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரையில் 480 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்..
  • 6 பாகிஸ்தானியர்கள் கைது.. இதுவரை 3 ஆயிரத்து 135 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியதாக தகவல்..
  • இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..
  • மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சி.ஏ.ஏ. சட்டம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் விமர்சனம்..
  • அண்ணாமலை முன்னிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க. உடன் இணைத்தார் சரத்குமார்..
  • மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று விளக்கம்..
  • அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்கக்கோரி ஈ.பி.எஸ். தாக்கல் செய்த வழக்கு..
  • தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்..
  • தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா..
  • உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில் வழங்கியது..

Next Story

மேலும் செய்திகள்