இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (06-03-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

புதுச்சேரி சிறுமி உடல் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, உறவினர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி...

சிறுமி பயன்படுத்திய பொம்மைகளுக்கு விளக்கேற்றி வைத்து குடும்பத்தினர் உருக்கம்...


புதுச்சேரி சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கை வெளியாவதில் தாமதம்...

உள் உறுப்புகளில் சில பாகங்களை எடுத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்...


சிறுமி படுகொலை வழக்கில் விரைவு நீதிமன்றம் அமைத்து ஒரு வாரத்தில் நீதி கிடைக்க நடவடிக்கை...

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று உறுதி...

சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு...

பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களுக்கும் கஞ்சா தான் காரணம் என அன்புமணி ராமதாஸ், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டு...

கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்ய, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தல்...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்