இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (11-04-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு...

மத்திய அரசின் ஆய்வறிக்கைகளை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பெருமிதம்...


தமிழகத்தில் பிரதமர் மோடியின் "ரோடு ஷோ" எடுபடாது என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த விவகாரம்...

ஈ.பி.எஸ். 'ரோடு ஷோ' நடத்தினால் எத்தனை பேர் வருவார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கேள்வி...

2019 மற்றும் 2021 தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோற்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி...


இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது...

கன்னியாகுமரி பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திட்டவட்டம்...


தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்...

சென்னையில் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது...

13ஆம் தேதி வரை 3 மையங்களில் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு...


தேச விரோத செயலை காங்கிரஸ் நியாயப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி இன்று கடும் தாக்கு...

பலவீனமாக இருந்த காங்கிரஸ் அரசால் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடைகள் கூட தர முடியவில்லை எனவும் விமர்சனம்...


பிரதமர் மோடியின் மேற்பார்வையில் இந்த ஆட்சியில் ஊழல் நடக்கிறது...

தேர்தல் பத்திரம், அதானி விவகாரத்தை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்