இன்றைய தலைப்பு செய்திகள் (01-04-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

x

கச்சத்தீவு விவகாரத்தில், புதிய தரவுகளால் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது...

எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்...

வெள்ள நிவாரண நிதி தராமல் திசை திருப்புவது ஏன் என, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி...


மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்து விட்டு, மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்காதது ஏன்...?

பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கேள்வி...

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்...


வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்கப்படும்...

ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பேச்சு...

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனவும் குற்றச்சாட்டு...


தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட, கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்கள் இன்று வெளியீடு...

மொத்த 950 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 609 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தகவல்...


அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேலும் 30 இடங்களுக்கு புதிய பெயரை சூட்டியது சீனா...

பெயரை மாற்றினால் சொந்தமாகி விடுமா? என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி...

எப்போதும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் மாநிலம் தான் எனவும் உறுதி...


Next Story

மேலும் செய்திகள்