காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தற்கொலைக்கு முயன்ற ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி மரணம்....

72மணி நேர சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழப்பு.....


ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் மறைவுச் செய்தி ஆராத் துயரை அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனை...

கொங்குச் சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி எனவும் உருக்கம்...


மறைந்த மதிமுக எம்.பி. கணேசமூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு...

இன்று மாலை 5 மணியளவில் சொந்த ஊரான குமார வலசு பகுதியில் உடல் நல்லடக்கம்...


2ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்...

காஷ்மீர் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கான தேர்தல் அரசாணை இன்று வெளியாகிறது...


தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக ஆயிரத்து 749 வேட்பு மனுக்கள் தாக்கல்...

கடைசி நாளான நேற்று மட்டும் 405 பேர் மனு தாக்கல்.....

அதிக பட்சமாக கரூர் தொகுதியில் 62 பேர் போட்டி....


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை...

வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள்...


Next Story

மேலும் செய்திகள்