மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு.........

109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.......


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் சரத்குமார் பிரசாரம்....

குஜராத்தில் தமிழர்கள் முன்னிலையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்..........


சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை.......

அதிமுக குறித்து சசிகலா தெரிவித்த கருத்து தொடர்பாகவும், அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதம் தொடர்பாகவும் ஆலோசனை எனத் தகவல்.....


குடியுரிமை திருத்த சட்டத்தில் என்ன குறைபாடுகள் உள்ளது என ப.சிதம்பரம் கூறட்டும் என்று அமித்ஷா ஆவேசம்.....

யாருக்கும் எந்தவித அநீதியும் இழைக்க மாட்டோம் என்றும் திட்டவட்டம்......


கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனை..........

பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில்12 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்....


மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் தீர்த்தவாரி கோலாகலம்.....

வைகை வடகரை ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மீது, தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் ஆரவாரம்.....


Next Story

மேலும் செய்திகள்