இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-04-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today headlines

x

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை.....

வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்...கடந்த 10 ஆண்டுகளில் செய்தவை எல்லாம் வெறும் டிரைலர் தான்...

இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளதாக பிரதமர் மோடி பேச்சு...


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 5ம் தேதி வெளியிடப்படும்....

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவிப்பு...


2021-ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது...

மத்திய அரசின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு...


நாங்கள் ஆட்சியிலா இருக்கிறோம், பிரதமர் மோடியை எதிர்ப்பதற்கு?...

அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்...


Next Story

மேலும் செய்திகள்