இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகம் முழுவதும் ஆயிரத்து 403 பேர் வேட்புமனு தாக்கல்...

அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், வடசென்னையில் 54 பேரும் மனு செய்துள்ளனர்...


பிரதமர் மோடியின் பிடியில் இருந்து இந்தியாவை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்...

ஸ்ரீவில்லிப்புத்தூரில் விருதுநகர், தென்காசி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்...


பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு, கேரண்டியும் இல்லை... வாரண்டியும் இல்லை...

10 ஆண்டுகளாக நாட்டை படுகுழியில் தள்ளியது பாஜக எனவும், முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...


தேர்தல் வந்தால் மட்டும்தான் பிரதமர் மோடி சிலிண்டர் விலையை குறைக்கிறார்...

தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற பிரதமர் நாடகம் போடுவதாகவும், முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...


தமிழகத்தை பெருமழை பாதித்தபோது வராத பிரதமர் மோடி தேர்தலுக்காக இப்போது வருகிறார்...

பொதுமக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பிரசாரம்...


Next Story

மேலும் செய்திகள்