"2 வாங்கிட்டு போ..வயசு பசங்க நல்லா குடிக்கிறது இல்ல.."-வெட்ட வெளியில் சாராய விற்பனை-அதிர்ச்சி வீடியோ

x

வேலூர் மாவட்டம், மேல்பட்டியை அடுத்த ரெட்டிமாங்குப்பத்தில் சாராய விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அங்குள்ள ஆற்றங்கரையில் சோதனை மேற்கொண்டபோது, சிவகுமார் என்ற முதியவர், சாராயம் விற்பனை செய்து வந்தது உறுதியானது. அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 40 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்