67 வருஷமாக குளிக்கவில்லை... குளிப்பாட்டிய கிராம மக்கள்..!திடீரென உயிரிழந்த அழுக்கு மனிதர்

x

குளிக்கமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை பார்த்திருப்போம்.

ஆனால் இங்கோ ஒருவர் 67 ஆண்டுகள் குளிக்காமலேயே 94 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

அசையாமல் இருக்கும் இவரை பார்க்கும் போது, இது ஒரு சிலை என்று தான் பலரும் நினைத்திருக்க கூடும். அந்த அளவிற்கு பாறையின் நிறமும் இவரது நிறமும் ஒத்திருக்கும்.

இப்படி அசுத்தமாக இவர் வலம் வர காரணம்... தண்ணீர் என்றால் இவருக்கு அலற்ஜியாம்!

குறிப்பாக தன் மீது தண்ணீர் பட்டால் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என அஞ்சிய காரணத்தினாலே யே பல ஆண்டுகளாக குளிப்பதையே தவிர்த்து வந்துள்ளார்.

ஈரான் நாட்டில் உள்ள Dejgah என்ற கிராமத்தில் வெட்ட வெளியில் வாழ்ந்து வந்த மனிதர் தான்... இந்த அமோ ஹாஜி.

பல முறை கிராம மக்கள் இவருக்கு குடிசை கட்டி கொடுத்தும்... அதனை நிராகரித்து, தனி காட்டு ராஜாவாக.. யாருக்கு கட்டுக்கடங்காத காளையாக வலம் வந்துள்ளார், அமோ ஹாஜி.

அதுவும் சுத்தத்திற்கும் இவருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது... சுத்தம் என்றால் என்ன? என்று கூட இவருக்கு தெரியாது.

இறந்து அழுகி போன முள்ளம்பன்றி தான் இவரது சாப்பாடே என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இதனையும் விரும்பி சாப்பிட்டு எப்படி இந்த மனிதர் இவ்வளவு நாள் உயிருடன் இருந்தார் என்பது தான் ஆச்சரியம்.

தீவிர சிகரெட் பிரியரான இவர்... சிகரெட் பிடிப்பதில் கூட விசித்திரமானவர்.

காய்ந்த மாட்டு சாணம் தான் இவரது தலைக்கேறும் போதையே.

இப்படி எல்லாவற்றிலும் அசுத்தத்தை கடைபிடிக்கும் இந்த நபர், நாளொன்றுக்கு ஐந்து லிட்டர் தண்ணீரை மறக்காமல் பருகிவிடுவாராம்.

இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து குளிப்பாட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் வயோதிகம் காரணமாக திடீரென கடந்த ஞாயிறு அன்று காலமாகியுள்ளார், அமோ ஹாஜி.

இந்த அளவிற்கு ஒரு நபர் தன்னையே வெறுத்து... அசுத்தமாக வாழ்ந்து மடிந்ததற்கு காரணம்... அவர் மனதில் மூடி மறைக்கப் பட்ட கடந்த கால சோக கதைகளாக தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்