உலக கராத்தே போட்டி - தங்க பதக்கங்களை அள்ளிய தமிழக வீரர், வீராங்கனைகள் | Chennai

உலக கராத்தே போட்டி - தங்க பதக்கங்களை அள்ளிய தமிழக வீரர், வீராங்கனைகள் | Chennai
x

மலேசியாவில் நடைபெற்ற உலக கராத்தே போட்டியில் 12 தங்கப் பதக்கங்களை வென்று திரும்பிய தமிழக வீரர், வீராங்கனையருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசியாவில் நடைபெற்ற 6 வயதுக்கு மேற்பட்டோருக்கான 18வது உலக கராத்தே போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள், 21 பிரிவுகளில் போட்டியிட்டு 12 தங்க பதக்கங்களையும், தலா 5 வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்று அசத்தினர். இந்தநிலையில் தமிழகம் திரும்பிய அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாணவ, மாணவியர் கராத்தே போட்டியில் சாதித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.



Next Story

மேலும் செய்திகள்