திடீரென கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுத்த பெண்கள் - நாகையில் பரபரப்பு

x

நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தில், கள்ள சாராயம் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது..

நாகை மாவட்டம், வேளாங்கன்னி அடுத்துள்ளது காமேஸ்வரம் என்னும் மீனவ கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ள சாராயம் விற்கப்படுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், கல்வி பயிலும் மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

சாராய விற்பனையால், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும் அதிகளவில் பிரச்சனை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி, மகளிர் சுய உதவிக் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்