பெண்கள் மசூதிக்கு தனியாக வர தடை விதிப்பு - ஜமா மசூதிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

x

டெல்லி ஜமா மசூதிக்குள் பெண்கள் தனியாக வர தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், விளக்கம் கோரி மசூதியின் இமாமுக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் நோட்டீஸ் விடுத்துள்ளார்.

பெண்கள் நுழைய தடை விதிப்பது மிகவும் பாரபட்சமானது, பெண்களுக்கு தடை விதிக்க யாருக்கும் உரிமையில்லை என கூறியிருக்கும் சுவாதி, தடையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஒரு ஆணுக்கு எப்படி வழிபட உரிமை இருக்கிறதோ, அதே உரிமை பெண்ணுக்கு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்