லியோ படத்தில் 'விக்ரம்' சந்தானமா?... LCU-ல் வருமா? வராதா?- ஓபனாக போட்டு உடைத்த விஜய் சேதுபதி

x

லியோ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தகவல் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரியின் கலை விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நந்திதா ஸ்வேதா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். லியோ படத்தில் பணியாற்றி வரும் ரத்னகுமார், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்தும் ஒரு பக்க கண்ணாடியை பிடித்துக் கொண்டு சந்தானத்திற்கு சாவே இல்லை என்பதை போன்று பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனால் 'லியோ' படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவின.

இதுகுறித்து விழாவில் பேசிய விஜய் சேதுபதி, லியோ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்... மேலும், வெப் சீரிஸ்களில் நடத்தி வரும் தன் மகனுக்கும் தனக்குமான உறவு குறித்தும் விஜய் சேதுபதி நகைச்சுவையாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்