புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைப்பாரா..? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

x

புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க, மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த ஜெய்சுகின் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைக் கொண்டு திறக்க, மக்களவை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். மேலும் குடியரசு தலைவரே நாடாளுமன்றத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் படைத்தவராக உள்ளபோது, குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காதது, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ளார். இந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஷ்வரி, நரசிம்மா ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு இன்று விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்