ரஜினி அஜித் சந்திப்பு நிகழுமா?

x

ரஜினிகாந்த்தின் ஜெயிலர், அஜித்குமாரின் துணிவு படங்களின் படப்பிடிப்பு ஒரே ஸ்டூடியோவில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு படத்தில் சில்லா சில்லா பாடல் படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ள நிலையில், சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அதன் படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதே ஸ்டூடியோவில் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பும் நடைபெறுவதால் ரஜினிகாந்த் - அஜித்குமார் சந்திப்பார்களா? இருவரது புகைப்படம் வெளியாகுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்