நம்பர் 1 பவுலர் அஸ்வினை சேர்க்காதது ஏன்?... "ரோகித் செய்த அந்த ஒரு தவறு தான்..." - சச்சின்

x

டெஸ்ட் உல‌க‌க் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு டிவிட்டர் மூலம் ச‌ச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர், போட்டியின் முதல் நாளிலேயே வெற்றிக்காக வலிமையான அடித்தளத்தை அமைத்த‌தாக பாராட்டியுள்ளார். ஆட்டத்தில் நிலைத்திருக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் பேட்டிங் செய்ய வேண்டியிருந்ததாகவும், ஆனால் அவர்களால் முடியவில்லை என்றும் ச‌ச்சின் கூறியுள்ளார். இந்திய அணியில் சில நல்ல விஷயங்கள் இருப்பதாக தெரிவித்த ச‌ச்சின், ஆனால், டெஸ்ட் பவுலர் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அஸ்வினை அணியில் சேர்க்காத‌து ஏன் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் 8 சிறந்த பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று போட்டிக்கு முன்பே குறிப்பிட்டதாகவும் ச‌ச்சின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்