சின்னம் யாருக்கு?... "ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிக்கல்.." - உத்தவ் தாக்கரே அதிரடி மூவ்

x

மகாராஷ்ட்ராவில், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு மீது, உச்சநீதிமன்றத்தில் வரும் 31-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்களை ஆராயாமல், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை அங்கீகரித்தது தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மனுவை அவசரமாக விசாரிக்க முன்வைத்த முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜூலை 31-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்