தேர்தல் ஆணையம் யாருக்கு சாதகம்..?- இன்று வரப்போகும் ரிசல்ட்

x

அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி அளித்த மனுவின் மீது முடிவெடுக்காமல் இந்திய தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த எடப்பாடி பழனிசாமி, கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவதால், கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தவிடக் கோரினார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர், இன்று மாலை முடிவெடுக்க உள்ளனர். கர்நாடகா பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், வரும் 20-ஆம் தேதி முடிவடைவதால், அதற்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கிறது. இதில், தங்கள் தரப்புக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்