"இங்கிலாந்து அரசரை மிஞ்சும் சொத்து" யார் அந்த அக்‌ஷதா மூர்த்தி?

x

பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷ்தா மூர்த்தி 126 கோடி ரூபாய் டிவிடன்ட் வருவாய் ஈட்டியுள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமராக, அக்டோபர் 25ல் பதவியேற்றார். இவரின் மனைவி அக்‌ஷ்தா மூர்த்தி, இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். இருவரின் மொத்த சொத்து மதிப்பு, பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனக் தம்பதியினரின் சொத்து மதிப்பு 6,902 கோடி ரூபாயாக உள்ள நிலையில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சொத்து மதிப்பு 3,309 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தில் அக்‌ஷதா மூர்த்திக்கு 3.89 கோடி பங்குகள் உள்ளன. இன்போஸிஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் இதன் அளவு 0.93 சதவீதமாகும்.

இதன் தற்போதைய சந்தை மதிப்பு 5,956 கோடி ரூபாய் ஆகும்.

2022ல், இன்போசிஸ் நிறுவன பங்குகள் மூலம், அக்‌ஷதா மூர்த்தி, 126 கோடி ரூபாய் டிவிடன்ட் வருவாய் பெற்றுள்ளார். பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்காதவர் என்று சான்றிதழ் பெற்றுள்ள அக்‌ஷதா மூர்த்தி, ஆண்டுக்கு 30,000 பவுண்டுகள் கட்டணம் செலுத்தி, வெளிநாட்டு வருவாய்களுக்கு, வரி விலக்கு பெற்றிருந்தது, கடந்த ஏப்ரலில் சர்ச்சைக்குள்ளானது.

நிரந்தரமாக வசிப்பவர் என்ற சான்றிதழ் பெற்றால், அவர் சுமார் 2 கோடி பவுண்டுகள் வருமான வரி செலுத்த வேண்டி யிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனில், ஆண்டுக்கு சுமார் 189 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். நிரந்தரமாக வசிப்பவர் என்ற சான்றிதழ் பெற்று, முழு அளவில் வருமான வரி செலுத்த போவதாக அக்‌ஷதா மூர்த்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்