டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எங்கு நடக்கும்?.. ஐசிசி அறிவிப்பு

x

2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில், ஜூன் மாதம் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், தற்போது ஆஸ்திரேலியா முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்