"Bed Room ரகசியங்களை வேவு பார்க்கும் வாட்ஸ் அப்.." "தில்லுமுல்லு செய்யும் கூகுள்.." - - வெளிச்சம் போட்டுக்காட்டிய தனிஒருவன்... அதிர வைக்கும் பின்னணி

x

வாட்ஸ் ஆப் இல்லையேல் உலகே அமையாது ..என்பது தான் புது மொழி..உலகில் உள்ள இளசுகள் முதல் பெரிசுகள் வரை வயது வித்தியாசமின்றி பயன்படுத்தும் ஒரு செயலி என்றால் அது வாட்ஸ் அப் தான்... இதை பயன்படுத்தாத துறையோ அல்லது தனி நபரோ கிடையாது என்றே ..சொல்லலாம்..

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலகில் கிட்டத்தட்ட 230 கோடி பேரும், இந்தியாவில் சுமார் 50 கோடி பேரும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது..

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு, வாட்ஸ் அப் பயனாளிகளை

அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும் அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளத்தில் தீ..யாக பரவியது.. கிட்டத்தட்ட

8 கோடிக்கும் அதிகமானோர் அவரது பதிவை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாட்ஸ் அப் நிறுவனமே.. அவர் செய்த பதிவை மேற்கோளிட்டு ...பதிலளிக்கும் நிலைமைக்கு சென்றது

அமெரிக்காவில் வசிக்கக் கூடிய என்ஜினியர் போர்டு டப்ரீ என்பவர், அவருடைய டிவிட்டர் பக்கத்தில், நான் தூங்கிய பின்பு, என்னுடைய வாட்ஸ் அப்பில் உள்ள மைக்ரோ போன்கள்

இயங்கி உள்ளதாக கூறி, அதற்கான ஸ்கீரின் ஷாட்டையும்

ஷேர் செய்து இருந்தார். அதோடு... என்ன தான் நடக்கிறது என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்.

ஏற்கனவே பெகாசஸ் மூலம் அமைச்சர்கள்,அரசியல் வாதிகள், நீதிபதிகள், காவல்துறைஅதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் போர்டு டப்ரீயின் பதிவை தொடர்ந்து,...... வாட்ஸ் அப், ...பயனாளர்களின் விவரங்களை ஒட்டு கேட்கிறதா ?.. என்ற விவாதம் சமூக வலைதளத்தில் தீ யாக பரவியது. இதனால் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் அனைவரின் மத்தியிலும் ஒரு வித அச்சம் நிலவி வருகிறது.

இதற்கு பதிலளித்த வாட்ஸ் அப் நிறுவனம், பயனாளர் கூகுள் போனை பயன்படுத்தி உள்ளாரெனவும், இது ஆன்ட்ராயிட் செயலியில் உள்ள பிழை எனவும், இது தொடர்பாக கூகுளை விசாரணைநடத்த கேட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது...

மேலும் வாட்ஸ் அப்பில் பரிமாறப்படும் தகவல் அனைத்தும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படுகிறது. அதனால் வாட்ஸ் அப்பால் அவற்றை கேட்க இயலாது என தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் உருவாக்கிய மிக மிக பாதுகாப்பான சாப்ட்வேர்களில் கூட, ஹேக்கர்கள் சர்வசாதாரணமாக புகுந்து விளையாடிய சம்பவங்கள் ஏராளம் உள்ளன. எந்த வகையான

செயலிகளாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்தும் போது ஒரு வித அச்ச உணர்வுடனே பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்