டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைய போராடும் வெஸ்ட் இண்டீஸ்

x

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைய போராடும் வெஸ்ட் இண்டீஸ்

டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. குரூப் பி பிரிவில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. குரூப் பி பிரிவில் 4 அணிகளும் தலா 2 புள்ளிகளைப் பெற்று இருப்பதால், இன்றைய போட்டிகளில் வெல்லும் இரு அணியே சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறும். இதனால், இன்றைய போட்டிகள் 4 அணிகளுக்கும் வாழ்வா? சாவா ஆட்டமாக கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்