களைகட்டிய குலசை தசரா திருவிழா - தயாராகும் ஆடைகள், கிரீடங்கள்

x

குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு வேடங்களுக்கான ஆடைகள், கிரீடங்கள் தயாரிக்கும் பணியில் தையல் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதை முன்னிட்டு, காளி, முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, அம்மன் உள்ளிட்ட வேடங்களை அணிவதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர்.

இந்த வேடங்களுக்கான ஆடைகள், கிரீடங்கள் தயாரிக்கும் பணிகள், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆஞ்சநேயர், செங்காளி , கருங்காளி உள்ளிட்ட வேடங்களுக்கான கிரீடங்கள் தயாரிக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

இரண்டு வருடங்களாக தொழில் நலிவடைந்த நிலையில், இந்தாண்டு தசரா திருவிழா தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் என்று தையல் கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்