காளான் பறிக்க போன மனைவியை காணோம் ... தேடி சென்று பார்த்த கணவனுக்கு அதிர்ச்சி

x

அரியலூர் மாவட்டம் பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு கேபிள் ஆபரேட்டர் கலைமணி.

இவரது மனைவி மலர்விழியும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணகியும் அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சென்றுள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு திரும்பாததால் கலைமணி வயலுக்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது மலர்விழியும், கண்ணகியும் அரிவாளில் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து கலைமணி அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரு பெண்களிடமும் இருந்த நகைகளை காணாததால், நகைக்காக மர்ம நபர்கள் கொலை செய்திருக்ககூடுமோ? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்