"டிரம்ப் கட்சிக்கு வாக்களியுங்கள்" - பைடனை கோபப்படுத்திய எலான் மஸ்க்

x

அமெரிக்க இடைக்கால தேர்தலையொட்டி டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சிக்கு வாக்களிக்குமாறு எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதற்கான காரணத்தை வெளியிட்டிருக்கும் மஸ்க், பகிரப்பட்ட அதிகாரம் இரு கட்சிகளின் மோசமான அத்துமீறலை கட்டுப்படுத்துகிறது என்றும் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க பரிந்துரைப்பதாகவும், அதிபர் பதவி என்பது ஜனநாயகமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மஸ்க் ட்விட்டரை வாங்கியது பொய்யை பரப்பவே என அதிபர் பைடன் விமர்சனம் செய்திருந்த நிலையில் மஸ்கிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்