இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்...எலும்பு கூடாய் காட்சி அளிக்கும் அவலம்

x

இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்...எலும்பு கூடாய் காட்சி அளிக்கும் அவலம்

விருதுநகர் அருகே உள்ளது சின்னையாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில் உள்ள மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து எலும்புக் கூடாக காட்சி அளிக்கிறது. அதே போல் சின்னையாபுரத்தில் இருந்து வலையப்பட்டி செல்லும் சாலையிலும் பல மின்கம்பங்கள் மிகவும் அபாயகரமான மின்கம்பங்களாக இருக்கின்றன. எலும்பு கூடாய் காட்சி அளிக்கும் மின் கம்பங்களை மாற்றக்கோரி பொதுமக்கள் சார்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் விபத்துக்களை ஏற்படுத்த காத்திருக்கும் மின் கம்பங்களையும் தெருக்களில் பழுந்தடைந்து காணப்படும் மின் கம்பங்களையும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மாற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்