"விராட் கோலி என்னைவிட திறமையான வீரர்" - கங்குலி புகழாரம்..

x

"விராட் கோலி என்னைவிட திறமையான வீரர்" - கங்குலி புகழாரம்..

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னைவிட திறமையான வீரர் என பிசிசிஐ தலைவர் கங்குலி புகழாரம் சூட்டி உள்ளார்.

யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்குலி, தான் கிரிக்கெட் ஆடிய காலகட்டமும், கோலி கிரிக்கெட் ஆடும் காலகட்டமும் வெவ்வேறானவை என்றார்.

தன்னைக் காட்டிலும் கிரிக்கெட்டில் திறமையான வீரர் விராட் கோலி எனக் கூறிய கங்குலி, தன்னைவிட கோலி அதிகமான போட்டிகளில் ஆடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்