அசாமில் வெடித்த வன்முறை...பற்றி எரியும் வீடுகள் - களமிறங்கிய இந்திய ராணுவம்

x

அசாமில் வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 7 ஆயிரத்து 500 மக்களை இந்திய ராணுவம் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.அசாம் மாநிலத்தில் மெய்டிஸ்(meiteis) சமூக மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக இரண்டு சமூகங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் வன்முறை வெடித்த‌தால் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்நிலையில், வன்முறை பாதித்த பகுதிகளில் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படை பிரிவினர் களமிறக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 7ஆயிரத்து 500 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதட்டமான இடங்களில் ராணுவம் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்