அபராத தொகையை செலுத்திய விஜய்

x

காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியதாக இணையத்தில் வந்த புகாரை தொடர்ந்து நடிகர் விஜய் காருக்கு போக்குவரத்து போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பதற்காக கடந்த 20ஆம் தேதி தன்னுடைய காரில் சென்றார்.

இதுதொடர்பான வீடியோவை ஒருவர் சமூக வலைதளங்களில் மேற்கோள்காட்டி, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நடிகர் விஜய் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதாகவும், விஐபிக்கள் மட்டும் கருப்பு ஸ்டிக்கரை ஒட்ட மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்குமா என கேள்வி எழுப்பி இருந்தார்..

இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக நடிகர் விஜய்யின் கார் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இந்த அபராத ரசீதை போக்குவரத்து போலீசார் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் அபராத தொகையை செலுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்