துணை குடியரசுத் தலைவர் தேர்தல்....பாஜக சார்பில் ஜக்தீப் தன்கர் போட்டி | JagdeepDhankhar

x

துணை குடியரசுத் தலைவர் தேர்தல்....பாஜக சார்பில் ஜக்தீப் தன்கர் போட்டி

துணை குடியரசு தலைவராக இருந்து வரும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதனால், இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ஆம் தேதி வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால், வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, தேசிய ஜனநாயக‌க் கட்சியின் வேட்பாளராக, மேற்கு வங்க மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என அறிவித்தார். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்ட ஜக்தீப் தன்கர் வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்