"அட!… யாருங்க நீங்கலாம்" விஜய்காக சபரிமலையில் ரசிகர்கள் செய்த செயல் - தீயாய் பரவும் புகைப்படம்

x

விஜயின் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் விஜய் ரசிகர்கள் பேனருடன் சென்ற புகைப்படம் கவனம் பெற்றுள்ளது..

சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், துணிவு படம் வெற்றி பெற வேண்டி கடந்த வாரம் அஜித் ரசிகர்கள் சபரிமலையில் போஸ்டருடன் பிரார்த்தனை செய்தனர். இந்த புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் வாரிசு படம் வெற்றியடைய வேண்டி போஸ்டருடன் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். கோயில் வளாகத்தில் பேனருடன் விஜய் ரசிகர்கள் வலம் வரும் புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்