'வாரிசு' திரைப்படம் உலகம் முழுவதும் 7 நாட்களில் ரூ.210 கோடி வசூலித்துள்ளது - படக்குழு

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 7 நாட்களில் ரூ.210 கோடி வசூலித்துள்ளது - படக்குழு
x

வாரிசு திரைப்படம் வெளியாகி 7 நாள்களில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியானது.


இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இத்திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது, படம் வெளியான 7 நாள்களில் சுமார் 210 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக, அதன் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. வாரிசு திரைப்படத்துடன், அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படமும் அன்றைய தினம் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்